districts

img

மாவீரன் பகத்சிங் நினைவு தினம், சிபிஎம் 23 ஆவது மாநில மாநாட்டு கொடியேற்ற நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி, மார்ச் 23 - இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட சுதந்திர  போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுக தேவ் ஆகியோரின் 91 ஆவது நினைவு தின நிகழ்ச்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 23 ஆவது மாநில மாநாட்டு கொடி நாள் நிகழ்ச்சி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த  மூத்த தோழர் கே.வரதராஜன் இல்லத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சியில் மூத்த தோழர் இலக்குணன் கட்சிக் கொடியை  ஏற்றினார். ஸ்ரீரங்கம் பகுதி குழு அலுவலகத் தில் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், தேவி டாக்கீஸ் பகுதியில் தவமணி, ஸ்ரீரங்கம் பேருந்து நிலைய பகுதியில் கோவிந்தன் ஆகி யோர் கட்சிக் கொடியை ஏற்றினர்.  நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் சந்தானம், கிளை செயலாளர்கள், பகுதி குழு  உறுப்பினர்கள், தீக்கதிர் முன்னாள் பொது மேலாளர் ஆனந்தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று பாரதி நகர், பாரதிதாசன் நகர், கமலா நேரு நகர் கிளைகள் காட்டூர் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பகுதி குழு உறுப்பினர் நல்லையா தலைமை வகித்தார். கட்சி கொடியை மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா ஏற்றினார். இதில் மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள், கிளை செயலா ளர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாடு மற்றும் மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு தினத் தையொட்டி தஞ்சாவூர் மாநகரக்குழு சார்பில்,  தஞ்சை பாலாஜி நகர், 35 ஆவது வார்டு அன்பு நகர், மேட்டு எல்லையம்மன் கோவில் தெரு,  எம்.ஜி.ஆர் நகர், பம்பிங் ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், செங்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.  சிபிஎம் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சாமி.நடராஜன், என்.சரவணன், அர விந்த் சாமி, வசந்தி, மாநகரக்குழு உறுப்பி னர்கள் கரிகாலன், அன்பு, சி.ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒன்றியச் செயலா ளர் ஆர்.எம்.வீரப் பெருமாள், மூத்த தோழர் வீ. கருப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரத் தில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் பெரியசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.ராமசாமி மற்றும் நிர்வாகி கள் கலந்து கொண்டனர். பூதலூர் தெற்கு ஒன்றியம் பூதலூர், வெண்டையம்பட்டி, மேலக் காவேரி, கரியப்பட்டி, கோட்டரப்பட்டி உள்ளிட்ட  இடங்களில் கொடியேற்றி வைக்கப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.  பூதலூர் வடக்கு ஒன்றியம் பாதிரக்குடி யில் நடைபெற்ற கொடியேற்று விழாவில்  ஒன்றியச் செயலாளர் ரமேஷ், மாவட்டக்குழு  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது.

அறந்தாங்கி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்லு பட்டரை கிளை செயலாளர் கௌதம் பாண்டி  தலைமையில் மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு,  சுகதேவ் உருவப்படங்களுக்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர் மன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜியா வுதீன், தங்கராஜ். வாலிபர் சங்க மாவட்ட தலை வர் கர்ணா, சிபிஎம் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட  செயலாளர் அலாவுதீன், சிபிஎம் தாலுகா செய லாளர் தென்றல் கருப்பையா உள்ளிட்டோர் பேசினர்.

உறுதிமொழி ஏற்பு
கல்வியை காவிமயமாக்குவதற்கு எதிரா கவும், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக வும், புதன்கிழமை மாவீரர்கள் பகத்சிங், சுக தேவ், ராஜகுரு நினைவு தினத்தில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் சமத்துவத்தை வலியு றுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் நடை பெற்றது. கிளைத் தலைவர் ச.வீரமுத்து தலைமை வகித்தார். கிளை நிர்வாகி தினேஷ்  முன்னிலை வகித்தார். இந்திய மாணவர் சங்க தஞ்சாவூர் மாவட்ட தலைவர் வே. அர்ஜூன் குமார் விளக்க உரையாற்றினார்.

மன்னார்குடி
மன்னார்குடி நகரக் குழுவின் சார்பில் கட்சியின் செங்கொடியை நகரக்குழு உறுப்பி னர் வெ. ஜெயந்தி ஏற்றி வைத்தார். நகரச் செய லாளர் ஜி.தாயுமானவன், நகரக் குழு உறுப்பி னர்கள், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி. ரெகுபதி, சிஐடியு இணைப்பு சங்க தலை வர்கள் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப் பட்டினம் மாவட்ட குழு அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது  மாநில மாநாடு மற்றும் மாவீரர் பகத்சிங் நினைவுதினத்தை முன்னிட்டு, செங்கொடி ஏற்றப்பட்டது. நாகை நகர செயலாளர் க. வெங்கடேசன், நகர குழு உறுப்பினர்கள் வீ. சுந்தர், டி.தினேஷ், ஆலங்குடி ஊராட்சி மன்ற  தலைவர் என்.வடிவேல், எம்.குருசாமி, எம்.பி. குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தா லம், செம்பனார்கோவில் ஆகிய ஒன்றித்துக் குட்பட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டை விளக்கும் வகையில் 23 செங்கொடி களை நட்டு வைத்து கொடியேற்றி முழக்கமிட்ட னர். மயிலாடுதுறை நகரப் பகுதிகளில் கட்சி யின் நகர செயலாளர் துரைக்கண்ணு தலை மையில் இரண்டு இடங்களில் நடந்த நிகழ்ச்சி யில் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளை செய லாளர்கள் கலந்து கொண்டனர்.  திருக்கடையூரை அடுத்துள்ள டி.மணல் மேடு கிராமத்தில் கிளை செயலாளர் அ.உதயக் குமார் தலைமையில் நடைபெற்ற கொடிநாள்  விழாவில் ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்தி ரன், மாவட்டக் குழு உறுப்பினர் அமுல் காஸ்ட்ரோ, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஐயப்பன், குணசுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;