புரட்சியாளர் தோழர் லெனின் நினைவு தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த லெனின் படத்திற்கு மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். திருக்கடையூரில் உள்ள ஒன்றியக்குழு அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தினர்.