தஞ்சாவூர், அக்.8- சேதமடைந்த நிலையில் அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஒன்றியம் மருங்கப்பள்ளத்தில் புகழ்பெற்ற ஒளஷதபுரீஸ்வரர் என்ற சிவன் ஆலயம் உள்ளது. தஞ்சையை ஆண்ட 2 ஆம் சரபோஜி மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த சிவாலயத் திற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலிருந்து தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பேராவூரணியிலிருந்து சேதுபாவா சத்திரம் செல்லும் வழியில் மருங்கப் பள்ளம், சிவன்கோயில் சாலையில் கல்லணைக் கால்வாய், நாடியம், கோட்டக்குளம் செல்லும் நாடாகாடு கிளை வாய்க்காலின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு சேத மடைந்த நிலையில் பாலம் உள்ளது. சிவன்கோயிலுக்கு செல்லும் மக்கள், இந்த பாலத்தின் வழியாக கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் அதிகள வில் சென்று வருகின்றனர். பாலத்தின் பக்கவாட்டில் தடுப்புச் சுவர் இல்லாத தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படு கின்றன. அண்மையில் பாலத்தில் சென்ற கார் ஒன்று நிலைதடுமாறி ஆற்றுக் குள் விழுந்துவிட்டது. குருவிக்கரம்பை செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டால், மாற்றுப் பாதை யாக இந்த பாலத்தைத் தான் பயன் படுத்தியாக வேண்டும். மேலும், கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் முக்கிய சாலை யாகவும் இது உள்ளது. முக்கியத்து வம் வாய்ந்த சாலையில் உள்ள பக்க வாட்டுச் சுவர் இல்லாத, சேதமடைந்த பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை. எனவே, விபத்து ஏற்படும் முன் சேத மடைந்த இந்தப் பாலத்தை இடித்து விட்டு, புதிய பாலம் கட்டித்தர வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.