districts

மஞ்சப்பை விருது ஆட்சியர் அறிவிக்கை

திருவாரூர், ஏப்.21-

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் மற்றும் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படவுள்ளது.

    இதன்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள் / சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியான திகழும் 3 பள்ளிகள் / 3 கல்லூரிகள் / 3 வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது. முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும்.  

   இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் (https://Tiruvarur.nic.in) கிடைக்கும். விண்ணப்ப படிவத்தில் தனிநபர் / நிறுவனத்தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (CD) பிரதிகள் இரண்டு மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.05.2023 என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.