கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலை தமிழகத்தின் முக்கியமான நெடுஞ்சாலைகளுள் ஒன்று. இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்தச் சாலை புதிதாக போடப்படுகிறது. சாலை போடும் பணியும் மெதுவாகவே நடக்கிறது. வழுத்தூர், நெடுந்தெரு, பசுபதிகோயில் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக போடப்பட்ட இந்தச் சாலையின் சில இடங்கள் பெயர்ந்துவிட்டன. இச்சாலை தரமாகப் போடப்படுகிறதா என்பதை நெடுஞ்சாலைத் துறை கவனிக்குமா?