districts

img

சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதி கரூரில் 2 நாட்களில் ரூ.1 லட்சம் வசூல்

கரூர், பிப்.2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய மாநாடு ஏப்ரல்  2-6 தேதிகளில் மதுரையில் நடைபெறு கிறது. அகில இந்திய மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் நிதி திரட்டு வதற்கு பிப்.1 முதல் 15 வரை பொது மக்கள், வியாபாரிகளிடம் உண்டி யல் வசூல் மூலம் நிதி திரட்டும் இயக்கம் நடைபெறுகிறது. இத னொரு பகுதியாக கரூர் மாவட்டம் முழுவதும் உண்டியல் வசூல் சிறப்பாக நடைபெற்றது.  கரூர் மாநகரம்  கட்சியின் கரூர் மாநகரக் குழு  சார்பில் தாந்தோணிமலை கடைவீதி யில் உண்டியல் வசூல் நடை பெற்றது. இயக்கத்திற்கு கட்சியின்  மாநகரச் செயலாளர் எம்.தண்ட பாணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவா னந்தம் ஆகியோர் உண்டியல் வசூலை துவக்கி வைத்தனர். மாவட்டக் குழு உறுப்பினர்கள், வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் சிவா,  மாவட்டத் தலைவர் சதீஷ், ராயனூர்  கிளை கணேசன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தோகைமலை கட்சியின் ஒன்றியச் செயலாளர் எ.சுப்பிரமணி தலைமை வகித்தார். தெலுங்கப்பட்டி கிராமத்தில் வீடு, வீடாகச் சென்று உண்டியல் வசூல் செய்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சக்திவேல் உண்டி யல் வசூலை துவக்கி வைத்தார். க.பரமத்தி வசூல் இயக்கத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் குப்பம் கா.கந்தசாமி தலைமை வகித்தார். சின்னதாராபுரம் கடைவீதியில் நடை பெற்ற உண்டியல் வசூலை மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சி.முருகே சன், மாவட்டக் குழு உறுப்பினர் கே. கந்தசாமி ஆகியோர் துவக்கி வைத்த னர்.  மாவட்டக் குழு உறுப்பினர் ப.சர வணன், ஒன்றிய குழு உறுப்பி னர்கள் கே.குமாரசாமி, எஸ்.செல்ல கண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரவக்குறிச்சி  பள்ளப்பட்டி கடைவீதியில் நடை பெற்ற உண்டியல் வசூல் இயக்கத் திற்கு கட்சியின் ஒன்றியச் செயலா ளர் எம்.ஆறுமுகம் தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.ஆர்.ராஜாமுகமது, மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.கணேசன் ஆகியோர் இயக்கத்தை துவக்கி வைத்தனர். ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச்செல்வன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ வசூலை துவக்கி வைத்தார். கடவூரில் வட்டச் செயலாளர் பி.பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி உண்டியல் வசூலை துவக்கி வைத்தார். கடைவீதி, வீடு வீடாகச் சென்று பொதுமக்கள், வியாபாரிகளிடம் நிதி  கேட்ட பொழுது மிகவும் மகிழ்ச்சி யாக தங்களால் முடிந்த நிதியை வழங்கியது மட்டும் இல்லாமல், ஏழை, எளிய மக்களுக்கு பாதுகாவ லனாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் இருக்கிறது. அந்த  கட்சிக்கு நிதி கொடுப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று பெருமையுடன் தெரிவித்த னர். இரண்டு நாட்களில், மாவட்டம்  முழுவதும் ரூபாய் ஒரு லட்சத்திற் கும் மேல் நிதி வசூலானது.