districts

எடமணலில் 25 ஆயிரம் மெ.டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு கட்டப்படும்: ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை, அக்.9 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் அருகேயுள்ள எடமணலில் ரூ.26 கோடி செலவில் 25,000 மெட்ரிக் டன்  கொள்ளளவுக் கொண்ட நெல் சேமிப்பு  கிடங்கு கட்டப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.         மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் ஊராட்சி ஒன்றியம் திருக்கருகா வூர், எடமணல் ஆகிய கிராம ஊராட்சி களில் ஊரக வளர்ச்சித்துறை, உணவுத்துறை ஆகிய துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணி களை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.  சுற்றுப் பயணத்தின்போது மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் ஊராட்சி ஒன்றியம் திருக்கருக்கா வூர், எடமணல்  ஆகிய பகுதிகளில் நடை பெற்று பல்வேறு வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக குடிநீர் வசதி, சாலை வசதி, சுடுகாடு வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கைகள் உட னடியாக நிறைவேற்றித் தரப்படும். அதுமட்டுமின்றி, பல்வேறு வளர்ச்சி  பணிகளும், ஆவாஸ் யோஜனா வீடு  கட்டும் பணிகளும் நடைபெற்று வரு கின்றன. பொது மக்களுக்கு ஒதுக்கப் பட்ட இத்திட்டங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளேன்.  எடமணலில் 15,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது.

அதனை கூடுதல் கொள்ளளவு மெட்ரிக் டன் அளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்காக மாற்றிக் கட்ட தமிழக அரசிடம் சிறப்பு அனுமதி கேட்கப்பட்டு, தமிழ்நாடு முதல மைச்சர் தற்போது அனுமதி வழங்கி யுள்ளார்.  இந்த புதிய நெல் சேமிப்பு கிடங்கா னது ரூ.26 கோடி மதிப்பீட்டில், 25,000  மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட  நெல் சேமிப்பு கிடங்காக அமைய வுள்ளது. இதன் கீழ்த்தளம் சிமெண்ட் தரையாகவும், மேல்பகுதி திறந்த வெளி யிலும் பக்கவாட்டுப் பகுதிகள் திறந்த வெளியிலும் இருக்கும். இந்த நெல் சேமிப்பு கிடங்கில் கொள்முதல் செய்யப் படும் நெல் மூட்டைகள் குறைந்த செல வில், அதிக நெல் மூட்டைகள் முழு மையாக பாதுகாக்கப்படும். புதிதாக கட்டப்படும் நெல் சேமிப்பு கிடங்கு பணி  3 மாதங்களில் நிறைவடையும். தற்போது மாவட்டத்தில் 57 நிரந்தர கொள்முதல் நிலையங்கள் உள்ளன. 6  திறந்தவெளி நெல் சேமிப்பு இடம் உள்ளது. அவை படிப்படியாக மூடப்படும்.  எருக்கூரில் 2 நவீன அரிசி ஆலையும், சித்தர்காட்டில் ஒரு நவீன அரிசி ஆலை யும் இயங்கி வருகிறது. ஆக்கூரில் உள்ள ஒரு நவீன அரிசி ஆலையில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு ஆட்சியர் கூறினார்.  சுற்றுப் பயணத்தின்போது கொள்ளி டம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருண் மொழி (கி.ஊ), உதவி பொறியாளர்கள் பலராமன், பூர்ணசந்திரன், தாரா, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உணவுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

;