விசாரணை நடத்த குழு அமைப்பு திருச்சிராப்பள்ளி, ஜன.14 - திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரு கின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த ஜன.6 அன்று இறுதியாண்டு படிக்கும் சட்ட மாண வர்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது, 2 மாணவர்கள் சேர்ந்து, மாணவர் ஒருவ ருக்கு குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து கொடுத்து, அவரை குடிக்கச் சொல்லி ஏமாற்றியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவர் பேராசிரியரிடம் புகார் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த 3 உதவிப் பேராசிரியர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது அறிக்கையை ஜன.18 அன்று சமர்ப்பிக்கும். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப் பட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.