நெகிழி இல்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள்- விளையாட்டு ஆர்வலர்கள் பங்கேற்றனர். அக்கரைப்பேட்டை மீனவ கிராமம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி.நாகை மாலி. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், மாவட்ட சார் ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய மாரத்தான் ஏழு கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.