districts

திறன் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், ஜூன் 19-  

     பிரான்ஸில் உள்ள லியான் நகரில் 2024-ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் சர்வதேச திறன் போட்டிகள் (WORLD  SKILLS-2024) நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக, தொடக்க நிலையில் மாவட்ட அள விலான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.  

    இதில் பங்கேற்க தகுதிவாய்ந்த தஞ்சாவூர் மாவட்டத் தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் naanmudhalvan.tn.gov.in/tnskills என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு tnskills@ naanmudhalvan.in வலைதளத்தினை பார்வையிடலாம்.

   10 துறைகளில் உள்ள, 55 தொழிற்பிரிவுகளில் தங்க ளது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற  உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன்.30 ஆகும்.

    இதற்கான வயது வரம்பு 01.01.1999 அன்றும், ஒரு சில திறன் போட்டிகளுக்கு 01.01.2002 அதற்கு பிறகும் பிறந்தி ருக்க வேண்டும்’’ என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.