districts

கோடக்குடி பள்ளியில் ஆயிரம் அறிவியல் திருவிழா

அறந்தாங்கி, மே 19-  

   புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கோடக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வானவில் மன்றம் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா மணமேல்குடி வட்டார வளமையும் மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் தலைமையில் நடைபெற்றது.

   வெட்டிவயல் கவுன்சிலர் முத்துக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத்  தலைவர் ராசப்பா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோசலை ஆகியோர்  முன்னிலை  வகித்தனர். நிகழ்வில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹாலிது மரைக்காயர் வரவேற்றார். கண்ணன் நன்றி கூறினார்.

    இல்லம் தேடிக் கல்வி மைய கருத்தாளர் சண்முகப்பிரியா, பள்ளி மேலாண்மை குழு தலைவி சத்யா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்பேத்கர் விருது பெற்ற இல்லம் தேடிக் கல்வி மையம் தன்னார்வலர் பிரபா சரஸ்வதி பாராட்டப் பட்டார்.