districts

திருச்சி முக்கிய செய்திகள்

பள்ளி வாகனங்கள் நாளை ஆய்வு

தஞ்சாவூர், மே 9-  தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சியர் அறிவுறுத்த லின்படியும், சென்னை போக்குவரத்து ஆணையர் சுற்றறிக்கையின் படியும்,  உச்சநீதிமன்ற வழிகாட்டு தல் மற்றும் நெறிமுறை யின் படியும் பள்ளி வாக னங்கள் செயல்படுகின்ற னவா என ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற் கொள்ளப்படுவது வழக்கம்.  அந்த வகையில், தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மே 11 (சனிக் கிழமை) காலை 9 மணிக்கு பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய உள்ளார் என தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். 

மே தின சிறப்பு பேரவை

திருவாரூர், மே 9 -  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருத்து றைப்பூண்டி தெற்கு ஒன்றி யம் மற்றும் நகர கட்சி உறுப்பினர்களுக்கு உறுப் பினர் அட்டை வழங்கும் மே தின சிறப்பு பேரவை, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கட்சி  அலுவலகத்தில் வியாழக் கிழமை நடைபெற்றது. பேரவைக்கு திருத்து றைப்பூண்டி சிபிஎம் நகரச் செயலாளர் கே. கோபு, தெற்கு ஒன்றியச்  செயலாளர் டி.வி. காரல்  மார்க்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி கட்சி உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் அட்டை வழங்கி  அரசியல் விளக்க உரை யாற்றினார். முன்னதாக  மாவட்ட செயற்குழு உறுப் பினர் சி.ஜோதிபாசு, மாவட் டக் குழு உறுப்பினர்கள் டி.சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன் ஆகியோர் உரையாற்றினர். மன்னார்குடி  மன்னார்குடி நகர, ஒன்றிய குழுக்களின் சார்பில் கட்சி உறுப்பினர் களுக்கு கார்டு வழங்கும் மேதின சிறப்பு பேரவை மன்னார்குடியில் கட்சியின்  ஒன்றியச் செயலாளர் கே. ஜெயபால், தலைமையில், நகரச் செயலாளர் ஜி.தாயு மானவன் முன்னிலையில் நடைபெற்றது. கட்சி உறுப் பினர்களுக்கு கார்டு வழங்கி செயற்குழு உறுப்பி னர்கள் கே.தமிழ்மணி, டி. முருகையன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு.பிரகாஷ் ஆகியோர் பேசினர்.

ஓய்வூதியர் சங்க  ஆலோசனை கூட்டம்  

திருச்சிராப்பள்ளி, மே 9 - தமிழ்நாடு அரசு  அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்க ஆலோசனை கூட்டம் வியாழனன்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலை வர் சிராஜுதீன் தலைமை வகித்தார்.  காவேரி மருத்துவ மனை இருதயவியல் மருத்துவர் எஸ்.அரவிந்த குமார் இதயநோய், சர்க்கரை நோய் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது குறித்து விளக்கி கூறினார். பின்னர் ஓய்வூதியர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். வருமான வரி  குறித்து வருமான வரித் துறை அலுவலர் குமரகுரு பரன் விளக்கிப் பேசினார். மருத்துவக் காப்பீட்டு திட்டம், உயிர்வாழ் சான்றி தழ் வழங்குதல் குறித்து  சங்க மாநிலச் செயலா ளர் எம்.வி.செந்தமிழ்செல் வன் பேசினார். முன்னதாக  சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.மதிவாணன் வர வேற்றார். மாவட்ட பொரு ளாளர் எல்.துளசிராமன் நன்றி கூறினார்.

உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி: நாளை தஞ்சையில் நடக்கிறது

தஞ்சாவூர், மே 9-  தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட மான, நான் முதல்வன் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு  மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்திட பல்வேறு முன்னெடுப் புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில், ஆட்சி யர் தீபக் ஜேக்கப் தலைமையில், ‘கல்லூரிக் கனவு’ உயர்கல்வி வழி காட்டல் நிகழ்ச்சி மே 11 (சனிக்கிழமை)  காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி  வரை தஞ்சாவூர் தீர்க்க சுமங்கலி மஹா லில் நடைபெற உள்ளது. இந்த கல்லூரிக் கனவு நிகழ்ச்சி யில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற  மாணவர்களுக்கு மருத்துவம், வேளாண்மை, பொறியியல், மீன்வளத் துறை, கலை மற்றும் அறிவியல் மற்றும்  இதர பாடப் பிரிவுகள் குறித்து துறை வல்லுநர்கள் மூலம், உயர்கல்வி பயில் வதற்கான வழிமுறைகள், முதல் தலை முறை பட்டதாரி சான்றிதழ் பெறுவ தற்கான வருவாய்த் துறை அலுவலர்க ளின் ஆலோசனைகள், வங்கி மேலா ளர்கள் வழியே கல்விக் கடன் பெறுவதற் கான வழிமுறைகள் குறித்து தனிநபர்  ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டு தல்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரிகளில் பயிற்று விக்கப்படும் பாடப்பிரிவுகள் குறித்து  தெரிந்து கொள்வதற்காக கல்லூரி களின் அரங்கங்கள் மற்றும் வழிகாட்டி கையேடுகள் வழங்கப்பட உள்ளன.  இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்கள் பங்குபெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

மே 13 திருவாரூரில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

திருவாரூர், மே 9 - மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி  பெற்ற மாணவ-மாணவியர்கள் தங்களின் எதிர் காலக் கனவினை நனவாக்கும் வகையில், அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்த ‘கல்லூரிக் கனவு’ வழிகாட்டுதல் நிகழ்ச்சி மே 13 (திங்கள்கிழமை) அன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும்  விவரங்களுக்கு நேரிலும், 04365- 250126  என்ற தொலைபேசி எண்ணிலும் நாகப்பட்டி னம்/திருவாரூர் மாவட்டத் திறன் பயிற்சி அலு வலகம் (அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்  நாகப்பட்டினம்), உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம். திருவாரூர் மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளி படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ/ மாணவியர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு, கனவுத் திட்டத்தினை  செயல்படுத்திடுமாறு மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

விவசாயத்துக்கு தடையில்லா  மும்முனை மின்சாரம் வழங்குக! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, மே 9 - கடுமையான வறட்சி நிலவி வருவதால் விவசாயத்தைப் பாதுகாக்க தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டு மென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி தலைமையில், புதுக்கோட்டையில் வியாழக் கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின்  மாநில துணைத் தலைவர் கே.முகமதலி, மாநிலக்குழு முடிவுகளை விளக்கிப் பேசி னார். நடைபெற்ற வேலைகள் குறித்து மாவட்டச்  செயலாளர் ஏ.ராமையன் பேசினார். கடும் வறட்சியின் காரணமாக புதுக் கோட்டை மாவட்டத்தில் விவசாயம் கடுமை யாகப் பாதிப்படைந்துள்ளது. ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்தைத் தவிர, ஏனைய சாகுபடிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. ஆழ்துளை கிணற்றுப் பாசனமும் போது மான மின்சாரம் கிடைக்காமல் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. எனவே, எஞ்சி யுள்ள விவசாயத்தை பாதுகாக்க விவசாயி களுக்கு தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கத் தேர்தலை நேர்மையுட னும், ஜனநாயக முறைப்படியும் நடத்து வதற்கு தமிழ்நாடு அரசு உறுதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் மாவட்டப் பொருளாளர் எம். பாலசுந்தரமூர்த்தி, துணைச் செயலாளர்கள்  த.அன்பழகன், வீரமணி, துணைத் தலைவர்கள்  ஆர்.சி.ரெங்கசாமி, பாண்டியன் உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு வார்டு அமைப்பு

தஞ்சாவூர், மே 9-  வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்க, தஞ்சை மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் தனி சிறப்பு வார்டு அமைக்கப் பட்டுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்தார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால், தஞ்சாவூர்  மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள், சாலையோர இடங்கள், கிராம பஞ்சாயத்துகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி  உள்ளிட்ட முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து  சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் காட்டுத் தீ ஏற்படாமல் இருக்க மாவட்ட அளவிலான குழு நியமனம் செய்யப்பட்டு வனப் பகுதிகளை கண்காணித்திடவும் நிர்வகி த்திடவும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், வெப்ப அலையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சையளித்திட ஏதுவாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன” என்றார்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 20 ஆண்டு சிறை

புதுக்கோட்டை, மே 9 - புதுக்கோட்டை அருகே நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்  தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் வாழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.மாரிமுத்து (63). இவர் கடந்த 2023  மே 29 ஆம் தேதி 4 வயது சிறுமியை மாட்டுக் கொட்டகைக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிறுமி யின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல்  நிலை யத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின்பேரில் போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மாரிமுத்துவைக் கைது செய்த னர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், பாலியல் வன்கொ டுமை செய்த குற்றத்துக்காக மாரிமுத்துவுக்கு 20 ஆண்டுகள்  சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதி பதி எஸ்.ஜெயந்தி புதன்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப் பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ.5 லட்சம் நிவாரண உதவி  வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம்:  தோகை முருகன் பில்டர்ஸ் துவக்கம்

கரூர், மே 9 - கரூர் கோல்டு பைனான்ஸ் மற்றும் தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களில் நிலம் மற்றும் நியாயமான விலையில் தவணை முறையில் வீடு கட்டித் தரும் பில்டர்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் கரூர் பில்டர்ஸ் உரிமையாளர் தோகை முருகன்.  கொரோனா காலத்தில் தினசரி 200 துப்புரவுப் பணியா ளர்களுக்கு உணவளித்து உதவி செய்தார். கடந்த வாரம்  மினரல் வாட்டர், நீர் மோர், பழவகைகள் அளிக்கக் கூடிய  வகையில் மோர் பந்தல் திறந்தார். இந்நிலையில், வியாழ னன்று தினசரி ஆயிரம் பேருக்கு கோடைகாலம் முடியும் வரை தயிர் சாதம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவு வழங்கும் விழாவை ராகாஆயில் மில்ஸ் உரிமை யாளர் தமிழ்மணி துவக்கி வைத்தார்.   சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், சிபிஎம் கரூர் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் பூரணம்,  நகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கஞ்சா, லாட்டரி விற்பனை:  திருச்சியில் 31 பேர் கைது

திருச்சிராப்பள்ளி, மே 9 - திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருச்சி மாநகரில் செசன்ஸ் நீதிமன்றம், ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை  நகர், உறையூர் அரசு மருத்துவமனை ஆகிய காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை  நடத்தினர். இந்த சோதனையில் வெளிமாநில லாட்டரி சீட்டு கள் விற்றதாக 27 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  இதேபோல் உறையூர் பகுதியில் சூதாடியதாக இரண்டு  பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டு கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன. கண்டோன்மென்ட் பகுதி யில் 14 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் சிக்கினர். போலீசாரின்  இந்த அதிரடி வேட்டையில் மொத்தம் 31 பேர் கைது செய்யப் பட்டனர்.

உயர்கல்வி வழிகாட்டி  உறுப்பினர்களுக்கு பயிற்சி

அறந்தாங்கி, மே 9- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு ஆண்கள்  மேல்நிலைப் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டி உறுப்பினர் களுக்கான பயிற்சி, அறந்தாங்கி கல்வி மாவட்ட கல்வி அலுவ லர் ராஜேஸ்வரி  தலைமையில் தொடங்கியது. அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் மற்றும்  பள்ளித் துணை ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ)  சிவயோகம் வரவேற்றார். இந்நிகழ்வில் கருத்தாளர்களாக முதுகலை ஆசிரியர்கள் வெற்றிச்செல்வன், சாய் சரண்ராஜ்  ஆசிரியர் பயிற்றுநர் முத்துராமன் ஆகியோர் செயல்பட்டனர்.  நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மணமேல்குடி ஒன்றியத் திற்கு உட்பட்ட ஏழு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து  உயர்கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.  இப்பயிற்சியில் முக்கியமாக புதுமைப் பெண் திட்டம், மாணவிகளின் உயர்கல்விக்கு முக்கிய திட்டமாக உள்ளதால்  மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண் குழந்தைகளை 100 சதவீதம் உயர்கல்வி யில் சேர்க்க வேண்டும். பொருளாதார அடிப்படையில் பள்ளிக்குச் செல்ல மறுக்கும் மாணவர்களிடம் விழிப்புணர்வு  ஏற்படுத்தி பள்ளியில் சேர்க்க வைக்க வேண்டும் என தெரி விக்கப்பட்டது. பயிற்சியில் ஒவ்வொரு அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்தும் தலைமை ஆசிரியர்கள், உயர் கல்வி வழிகாட்டல்  பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை  குழு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

குடிநீரில் மாட்டுச்சாணம் கலந்த விவகாரம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை, மே 9- புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீரில் மாட்டுச்சாணம் கலந்தது தொடர்பாக தாக்க்ல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு  தொடர்பான மனு மீது  பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  உத்தரவிட்டது.  புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி கிராமத்தில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்திருப்பதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த எஸ்.சண்முகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் எஸ்.சண்முகம் தனது மனுவில், சங்கம்விடுதியில் உள்ள மேல்நிலை தொட்டியில் மாட்டு சாணம் கலந்து இருந்ததாக புகார் எழுந்தது. புகார் அளிக்கப்பட்ட மறு நாள் (ஏப்ரல் 26) பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கிராமத்திற்குச் சென்றதாகவும், பலர் நோய்வாய்ப்பட்டிருப்பதைக் கண்டறிந்ததாகவும்  தெரிவித்திருந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்னும் இரட்டை டம்ளர் முறை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சாதிப் பாகுபாடு காட்டும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இடைநிலை சாதியினர் பயன்படுத்தும் அதே டம்ளரில் பட்டியல் சாதியினர் குடிக்க அனுமதிக்கப்படவில்லை. பட்டியல் சமூக மக்கள் தனி இடங்களில் அமர வைக்கப்படுகின்றனர். பொதுப் பயன்பாட்டில் உள்ள குளங்கள், சமுதாயக் கூடங்களை  பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. குடிநீரில் மாட்டின் சாணம் கலக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கவேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான சாதிப் பாகுபாடுகளை ஒழிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் வலியுறுத்தியிருந்தார். இந்தப் பிரச்சனையில் அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மே 15ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

 

;