districts

img

பொன்னமராவதியில் சுகாதார திருவிழா கார்த்தி சிதம்பரம் எம்.பி., பங்கேற்பு

பொன்னமராவதி, ஏப்.19- பொன்னமராவதி அருகே உள்ள திருக் களம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கலை ஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான சுகாதார திருவிழா நடைபெற்றது.  முகாமை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். சுகாதார பணிகள் துணை இயக்குநர் அர்ஜுன் குமார்  வரவேற்றார். பொதுமக்களுக்கு காசநோய், கண், பல், காது, மூக்கு, தொண்டை, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.  இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;