புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கீல்காத்தில் காத மறவர் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக ஆமாஞ்சி ஊராட்சி மன்றம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் 10 ஆயிரம் மரக்கன்றுகள், முகக்கவசங்களை வழங்கினார்.