திருச்சிராப்பள்ளி, டிச.24 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் மற்றும் திருச்சி தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத் துறையுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான படைப்பிலக்கியப் பயிலரங்கம் நடைபெற்றது. டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் நடை பெற்ற இப்பயிலரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் ஞா.பெஸ்கி அறிமுகவு ரையாற்றினார். முனைவர் பொன்.புஷ்பராஜ், சி.பாக்கிய செல்வரதி, முனைவர் ஜோசப் சகாய ராஜ், தமுஎகச திருச்சி மாவட்டத் தலைவர் வி. ரெங்கராஜன், மாநகரத் தலைவர் இளங்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்நாள் காலை அமர்வுகளில் கவிஞர் நந்த லாலா “மை ஒருதுளி படைப்போ பெரு வெள்ளம்” என்னும் தலைப்பிலும், கவிஞர் முத்து நிலவன் “கவிதை என்ன செய்யும்?” என்ற தலைப்பிலும் உரையாற்றினர். மதிய அமர்வுகளில் தமுஎகச சார்பில் மாணவர்களுக்கு கவிதைப் பயிலரங்கு நடைபெற்றது. இரண்டாம் நாள் அமர்வில் முனை வர் இராஜாத்தி, எழுத்தாளர் இரா.முருகவேள், கவிஞர் சக்திஜோதி, பத்திரிகையாளர் ஜெடிஆர் ஆகியோர் உரையாற்றினர். நிறைவு விழாவில், கல்லூரி செயலர் முனை வர் பீட்டர், இணைமுதல்வர் அலெக்ஸ் ரமணி பங்கேற்று மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் களை வழங்கினர். மாணவர்களின் படைப்புகள் அடங்கிய ‘விதைநெல் 2021’ என்னும் இதழ் வெளி யிடப்பட்டது. தமிழ்த்துறை உதவிப் பேரா. ஜோ. சலோ இப்பயிலரங்கை ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.