districts

img

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 110 இளம் விஞ்ஞானிகளுக்கு பட்டம் வழங்கல்

மயிலாடுதுறை, டிச.21 -  மயிலாடுதுறை மாவட் டம் சீர்காழியில் தேசிய குழந் தைகள் அறிவியல் மாநாடு பேராசிரியர் வீழி நாதன் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடை பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்களை பெஸ்ட் மெட்ரிக் பள்ளியின் முதல்வர்  ராமலிங்கம் வரவேற்று பேசி னார். மயிலாடுதுறை மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் ஆர்.ரேணுகா, 110 இளம் விஞ்ஞானிகளுக்கு பட்டங் களை அளித்து உரையாற்றி னார்.  மாநாட்டில் 55 ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டு 5 ஆய்வு கள் மாநில மாநாட்டுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் என்.ஜி. செல்வராஜ், சீர்காழி மாவட்ட கல்வி அலுவலர் என்.குமார், பெஸ்ட் தமிழ்நாடு அறி வியல் இயக்க மாநில செய லாளர்  ஸ்டீபன் நாதன், மாவட்ட பொருளாளர்  தண்ட பாணி, மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஷீபா  ஆகி யோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாநாட்டில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக அறி வியல் இயக்க மாவட்ட செய லாளர் நந்த ராஜேந்திரன் நன்றி கூறினார்.