பாபநாசம் ரோட்டரிச் சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், ஆப்தீன் மெட்ரிக்குலேஷன் பள்ளி இணைந்து பாபநாசத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் அறிவழகன், செயலர் சிலம்பரசன், முன்னாள் தலைவர்கள் செந்தில் நாதன், சரவணன், விவேகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.