districts

முன்னாள்   செயலாளர் தோழர்.செ.கமலா அண்மையில் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் ஒன்றிய  முன்னாள்   செயலாளர் தோழர்.செ.கமலா அண்மையில் காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்வு  கடிச்சம்பாடியில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. செ.கமலா உருவப்படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச்செயலாளர் சின்னை.பாண்டியன் திறந்துவைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன். க.அருளரசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சா.ஜீவபாரதி, சி.நாகராஜன் மற்றும் ஜி.ராஜ்குமார், ஆர்.லெட்சுமணன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.