districts

img

வாலிபர் சங்க சைக்கிள் பேரணிக்கு நன்னிலத்தில் சிறப்பான வரவேற்பு

குடவாசல், ஏப்.27 - ‘இளைஞர்களுக்கு வேலை கொடு’ என்ற முழக்கத்தோடு 4 முனையில் இருந்து புறப்பட்டுள்ள வாலிபர் சங்கத்தின் சைக்கிள் பேரணியின் ஒரு முனையான பாண்டிச்சேரி பயணக் குழு தலைவரும் சங்கத்தின் மாநில துணைச்  செயலாளருமான ஏ.வி. சிங்காரவேலன் தலைமை யில் புறப்பட்ட பேரணி நன்னி லம் ஒன்றிய எல்லையான குமரமங்கலம் வந்தது. எழுச்சியுடன் வந்த டைந்த சைக்கிள் பேரணியை சங்கத்தின் மாவட்டத் தலை வர் எஸ்.எம்.சலாவுதீன் தலைமை வகித்து வரவேற் றார். ஒன்றிய தலைவர் எஸ். சுரேந்தர், செயலாளர் பி.ஜெயசீலன் பொருளாளர் கே.எம்.பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நன்னிலம் எல்லையான குமரமங்கலத்தில் இருந்து இளைஞர்களின் எழுச்சி சைக்கிள் பேரணி செல்லும் பாதையான கொல்லு மாங்குடி, பேரளம், பூந்தோட் டம், சன்னாநல்லூர் என சுமார் 15 கி.மீட்டர் வரை வாலி பர் சங்கத்தின் சார்பாக கொடி, தோரணம் கட்டப் பட்டு உற்சாகமான வர வேற்பு அளிக்கப்பட்டது. கொல்லுமாங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நன்னிலம் ஒன்றிய செயலாளர் கே.எம்.லிங்கம் தலைமையில், விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக இளை ஞர்களுக்கு சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்ட கவுன்சிலர் ஜெ.முக மது உதுமான், மாவட்ட  குழு, ஒன்றிய குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து பேரளத்தில் மாதர் சங்கத் தின் சார்பாகவும், பூந்தோட் டத்தில் சிஐடியு சார்பாகவும், சன்னாநல்லூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் மற்றும் இந்திய மாண வர் சங்கத்தின் சார்பாகவும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

;