districts

img

திருச்சி காவிரி மருத்துவமனையில் முதன் முறையாக குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை

திருச்சிராப்பள்ளி, மார்ச்.6- திருச்சி காவேரி மருத்துவமனையில் 6 வயது சிறுவனுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை ரத்த நோய், புற்றுநோய் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் வினோத் குணசேகரன் கூறியதாவது:  ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனுக்கு கீமோதெரபி சிகிச்சை பலனளிக்காத நிலையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுவனின் 8 வயது சகோதரி செல்களை பெற்று இந்த சிகிச்சை நடைபெற்றது. இப்போது இருவரும் நல்ல ஆரோக்கி யத்துடன் உள்ளனர்.  14 வயது சிறுமிக்கி ஏற்பட்ட ரிபராக்டரி ஹாட்ஜ்கின் லிம்போமா புற்று நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட சிறுமி யின் ஸ்டெம் செல்கள் பதப்படுத்தப்பட்டு மீண்டும் அவருக்கு பயன்படுத்தப்பட்டது.  எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய்க்கு மட்டு மின்றி, ரத்தம் குறித்த நோய்கள், மரபணு கோளாறு, எலும்பு மஞ்சை செயலிழப்பு, ஆகியவற்றை குணப்படுத்தலாம். சென்னை, வேலூரில் மட்டுமே செய்யப் பட்டு வந்த எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை முதல் முறையாக திருச்சி காவேரி மருத்துவமனையில் செய்யப்பட்டது என்றார்.  பேட்டியின்போது குழந்தைகள் புற்று நோய் மற்றும் ரத்த நோய் சிகிச்சை டாக்டர் சுப்பையா, டாக்டர் பிரபாகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

;