தஞ்சாவூர், ஜூன் 29-
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையில் நடத்தப்படும் முதுகலைப் பட்டப்படிப்பு, 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை புதன் கிழமை நடைபெற்றது. முதுகலைப் பட்டப் படிப்பில் சேரு வதற்காக 81 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில், தேர்வு செய்யப்பட்ட 44 மாணவர்களுக்கு துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சேர்க்கை ஆணை வழங்கினார்.
தேர்வு செய்யப்பட்ட, 44 மாணவர்களில், தமிழ்நாடு அர சால் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.2 ஆயிரம் பெறத் தகுதியான 20 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் பதிவாளர் (பொ) சி.தியாகராஜன், கலைப் புல முதன்மையர் பெ.இளையாப்பிள்ளை, பேராசிரி யர்கள் அ.ரவிச்சந்திரன், இரா.தனலெட்சுமி, சேர்க்கைப் பிரிவு கண்காணிப்பாளர் ரேவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.