districts

தீயணைப்பாளர் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் மயிலாடுதுறை ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை, ஜூலை 19 - மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு ஒன்றிய-மாநில  அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  தற்போது தமிழ்நாடு அரசு சீருடை பணி யாளர் தேர்வாணையத்தால் இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மாநகர ஆயுதப் படை) ஆண்கள் - 1526 மற்றும் பெண்கள் - 654,  இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) ஆண்கள் - 1091, சிறை  மற்றும் சீர்திருத்தத் துறை இரண்டாம் நிலை  சிறைக் காவலர் ஆண்கள் - 153 மற்றும் பெண்கள் - 08, தீயணைப்பு மற்றும் மீட்புப்  பணிகள் துறை தீயணைப்பாளர் ஆண்கள்  120 என மொத்தமாக 3552 பணியிடங் களுக்கு விளம்பர அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.  இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு  பொதுப் பிரிவினருக்கு 26-க்கு மிகாமல், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 28 வயதிற்கு மிகா மலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு 31 வயதிற்கு மிகாமலும், ஆதர வற்ற விதவைகளுக்கு 37 வயதிற்கு மிகா மலும் இருத்தல் வேண்டும்.  இத்தேர்விற்கு என்ற www.tnusrb.tn.gov.in இணையதளத்தில் 15.8.2022 ஆம்  தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படு கிறார்கள்.

தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி  வழிகாட்டும் மையத்தின் வாயிலாக 21.7.2022 (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு  இளைஞர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக  இத்தேர்வு குறித்த இலவச வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. விண்ணப்பிப்ப வர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்பு கள் தொடங்கப்படவுள்ளன. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து  கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களு டைய ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட்  அளவு புகைப்படத்துடன் 2-வது குறுக்குத் தெரு, பாலாஜி நகர், பூம்புகார் சாலை, மயி லாடுதுறை-1 என்ற முகவரியில் செயல்பட்டு  வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு 21.7.2022 அன்று நேரில் வந்து பயனடையு மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  மேலும் 6383489199 என்ற வாட்ஸ் அப்  எண்ணிற்கோ அல்லது 04364-299790 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தெரிவித்துள்ளார்.

;