districts

img

உரம், பூச்சிமருந்து, விதைகளை மானியத்தில் வழங்க வேண்டும் விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஆக. 2 - தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி புறநகர் மாவட்ட 14-வது மாநாடு தொட்டியத்தில் தோழர் கே.வரதராஜன் நினைவரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். வரவேற்புக்குழு செயலாளர் வரதராஜன் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் வாசித்தார். மாநில துணைத் தலைவர் முகமது அலி துவக்கவுரை ஆற்றினார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் சிதம்பரம் வாசித்தார். மாநாட்டில் மாநில செயலாளர் சாமி.நடராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பழநிசாமி, மாநிலக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், சிபிஎம் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  விவசாய உற்பத்தி பொருட்களுக்கு வேளாண் விஞ்ஞானி சாமிநாதன் பரிந்துரைப்படி, உற்பத்தி செலவுடன் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாய விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். ஆவின் பாலை சத்துணவு திட்டத்தில் சேர்க்க வேண்டும். உரம், பூச்சிமருந்து, விதைகளை மானியத்தில் வழங்க வேண்டும். தொட்டியம், காட்டுப்புத்தூரில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக வி.சிதம்பரம், மாவட்டச் செயலாளராக சு.நடராஜன், பொருளாளராக பி.ராமநாதன், துணைத்தலைவர்களாக சேகர், முருகேசன், துணைச் செயலாளர்கள் பாலு, சீனிவாசன் உள்பட 27 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மேலும் மாநில மாநாட்டு பிரதிநிதிகள் 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வரவேற்புக்குழு பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

;