districts

விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி பயிர் கடன் வழங்க வேண்டும் விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு கோரிக்கை

கரூர், ஆக.16 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர்  மாவட்ட 8-வது மாநாடு கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பழைய ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலை வர் ஏ.நாகராஜன் தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்பு குழு செயலாளர் வி.நாக ராஜன் வரவேற்றார். மாநாட்டின் கொடியை  மூத்த தலைவர் ஏ.ரெங்கராஜன் ஏற்றி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாநில துணைத் தலைவர் கே.முகமதுஅலி மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல் வேலை அறிக்கையையும், பொருளாளர் பி.ராமமூர்த்தி வரவு- செலவு அறிக்கை யையும் முன்வைத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலா ளர் மா.ஜோதிபாசு, சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.முருகேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் பி.ராஜு, விதொச மாவட்டச் செயலாளர் இரா.முத்துச் செல்வன், வழக்கறிஞர் அணி செயலாளர் பி.சரவணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.பார்த்திபன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர்.  மாவட்டத் தலைவராக கே.கந்தசாமி, செயலாளராக கே.சக்திவேல், பொருளாள ராக கே.சுப்ரமணியன், மாவட்ட துணைத் தலைவர்களாக பி.சங்கரநாராயணன், பி.வீர மலை, துணைச் செயலாளராக எஸ்.பி.ரா ஜேந்திரன், எ.நாகராஜன் உட்பட 15 பேர்  கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட் டது.

கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி ஆற்றில் இருந்து ராட்சத குழாய்  மூலம் நீரை கொண்டு வந்து நிரப்ப வேண்டும். மழைக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை வெள்ளியணை, கோவக் குளம், வீரராக்கியம், மாவத்தூர், முள்ளிப் பாடி, கழுகூர், கூடலூர் மற்றும் தோகை மலை, கடவூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஏரி,  குளங்களுக்கு குழாய்கள் மூலம் நீரை கொண்டு வந்து நிரப்ப வேண்டும். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள தரிசு நிலங்களை,  விவசாய நிலங்களாக மாற்றிடவும், விவசா யத்தை பாதுகாத்திடவும் மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற பயிர்  கடனை தேவையான அளவு வழங்கிட வேண்டும். கழுகூரில் பகுதி நேர ரேசன் கடையை உடனடியாக திறக்க வேண்டும். திருப்பூர் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்று கால்வாய் பாசன விவசா யிகளுக்கு இழப்பீட்டு ஆணையம் அறிவித்த  நிவாரணத்தை உடனே வழங்கிட வேண்டும். கரூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல்ஸ் தொழில்  பிரதானமாக உள்ளது. நூல் விலை ஏற்றத்தை  குறைத்து, தொழிலை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;