districts

கஞ்சா விற்ற தந்தை-மகன் கைது

திருச்சிராப்பள்ளி, மே 1 - திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்ப டையில் ராம்ஜி நகர் காவல் துறையினர் அதிரடியாக  நடத்திய சோதனையின் போது அப்பகுதியில் திருப் பத்தூர் மாவட்டம் பொம்மி குப்பம் பகுதியை சேர்ந்த  மது (67), அவரது மகன் முரு கன் (45) ஆகிய இருவரும் விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இருவரை யும் போலீசார் கைது செய்த னர். அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவும் ஒரு காரும்  பறிமுதல் செய்யப்பட்டது.