districts

img

கல்வி மேம்பாட்டு கருத்தரங்கம்

கும்பகோணம், பிப்.20- கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் தஞ்சை மற்றும் மயிலாடு துறை மாவட்ட கல்வி மேம்  பாட்டு கருத்தரங்கம் நடை பெற்றது. இக்கருத்தரங்கில் பல்வேறு தனியார் பள்ளி களைச் சார்ந்த தாளாளர்கள் கலந்து கொண்டனர். ஏ.ஆர்.ஆர் கல்வி நிறுவன ஏ.ஆர்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆர்.டி.பி கல்வி நிறுவன தாவூவத் பாஷா, தனியார் பள்ளி கூட்டமைப்பின் மயி லாடுதுறை மாவட்டத் தலை வர் பாலாஜி பாபு, செயலா ளர் என்.பிரபாகரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். கும்பகோணம் கார்த்தி  வித்யாலயா மெட்ரிக் மேல்  நிலைப்பள்ளி தாளாளர் கார்த்திகேயன் வரவேற்றார். தனியார் பள்ளி சங்க பொதுச்  செயலாளர் வழக்கறிஞர்  கே.ஆர்.நந்தகுமார் சிறப் புரையாற்றினார்.  இதில், விண்ணப்பித்து காத்துள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் தொடர் மற்றும் தற்காலிக அங்கீகாரம் வழங்க வேண்  டும், அங்கீகாரம் பெற்று பத்தாண்டுகளான பள்ளி களுக்கு நிரந்தர அங்கீகா ரம் வழங்க வேண்டும் உள்  ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் நிறைவேற்றப்பட்டன.