districts

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட மயிலாடுதுறை - குடவாசல் பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை

குடவாசல், அக்.22 - மயிலாடுதுறை முதல் குடவாசல் வழித் தடத்தில் மயிலாடுதுறை பணிமனையி லிருந்து இயங்கி வந்த பேருந்தை மீண்டும்  இயக்க வேண்டும் என சிபிஎம் கோரியுள்ளது.   மயிலாடுதுறையில் இருந்து மங்கநல்லூர்,  பேரளம், பூந்தோட்டம் வழியாக இரவாஞ் சேரி, கடமங்குடி, கண்டிரமாணிக்கம், பிலாவடி, பருத்தியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக குடவாசல் வந்துகொண்டு இருந்த பேருந்து எண்.457, மயிலாடுதுறை - குடவாசல் பேருந்தை கடந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில்  திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் இந்தப் பகுதி மக்கள் மிகவும்  பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த வழித்தடத் தில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை,மாலை இரு நேரங்களிலும் பேருந்து இயக்கப்பட்டதால், மாணவர்களுக்கு மிக வும் பயனுள்ளதாக இருந்தது.  நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் அதே  வழித்தடத்தில் இயக்க கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தும், பேருந்து இயக்கப்படவில்லை. கொரோனா காலத்தில் பேருந்து தற்காலிக மாக நிறுத்தப்பட்டு, தற்போது வரை பேருந்து  இயங்கப்படாமல் உள்ளது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பயணம் செய்யும் மகளிருக்கு கட்டணம் இன்றி பேருந்துகள் இயக்கும் நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலை யில் மாணவர்கள் மற்றும் மக்களின் கோரிக் கையை ஏற்று, மீண்டும் பேருந்தை தினமும் காலை-மாலை வேளையில் மேற்கண்ட வழித் தடத்தில் இயக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் திருவா ரூர் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குடவாசல் ஒன்றியச் செய லாளர் எம்.கோபிநாத் தெரிவித்துள்ளார்.

;