districts

img

போதையற்ற தமிழ்நாடு: கையெழுத்து இயக்கம்

ஆலங்குடி, மார்ச் 4- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிரான ஒரு கோடி  கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழு வதும் நடைபெற்று வருகிறது.  இதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன், ராஜஜெய ரஞ்சன், திருவரங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல், மேற்கு ஒன்றியச் செயலாளர் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், ஆலங்குடி மருத்துவர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் கலந்துகொண்டனர்.