districts

img

மிக்ஜம் புயல் பாதிப்பு: நிவாரணப் பொருட்கள் வழங்கல்

திருவாரூர், டிச.8 - மிக்ஜம் புயலால், வெள்ள பாதிப்புக்கு ஆளான பொதுமக்களுக்கு வழங்கும் வகையில், திருவாரூர் மாவட்டம் குட வாசல் பேரூராட்சி செயல் அலுவலர் பர மேஸ்வரி தலைமையில், துணைத் தலை வர் குணசேகரன் மற்றும் வார்டு கவுன் சிலர்கள் வர்த்தகர்களிடம் நேரடியாக சென்று  நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டன.  இதில், தண்ணீர் பாட்டில், பிஸ்கட், ரஸ்க் பாக்கெட், போர்வை, துண்டு, மருந்து கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு, பேக்கிங் செய்து மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கும்  நிகழ்ச்சி வியாழக்கிழமை குடவாசல்  பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10  ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பெறப்பட்ட நிவாரணப் பொருட்கள், மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. பாபநாசம் மிக் ஜாம் புயல் வெள்ள நிவாரணத்திற்கு ஒரு மாத ஊதியத்தை பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலை வர்  முத்துச் செல்வன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா, பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவி சங்கர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.