districts

img

சென்ட்ரலைஸ் கிச்சன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.27 - தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சென்ட்ரலைஸ் கிச்சன் திட்டத்தை ரத்து செய்ய  வேண்டும். விடுதி மாணவர் களின் உணவுப்படியை உயர்த்தி தர வேண்டும். விடுதி மாணவர்களின் ஊக்கத் தொகையை உடன டியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாண வர் சங்கம் தலைமையில் விடுதி மாணவர்கள் புத னன்று வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டாவினிலிருந்து புறப்பட்டு, மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தை நோக்கி பேர ணியாக சென்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சூரியா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் சம்சீர் அகமது, மாநில இணைச் செயலா ளர் ஜி.கே.மோகன், மாநிலக்  குழு உறுப்பினர் வைர வளவன், ஆமோஸ் ஆகி யோர் கண்டன உரை ஆற்றி னர். மாவட்டக் குழு உறுப்பி னர் சுதேசனா நன்றி கூறி னார்.