கரூர், ஆக.12 - ஒன்றிய மோடி அரசின் மூன்று புதிய குற்ற வியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, அனைத்து தொழிற் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தொ.மு.ச மாவட்டச் செயலாளர் பழ.அப்பாசாமி தலைமை வகித் தார். ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜி.பி.எஸ்.வடிவேலன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்கள் சி.ஆர்.ராஜாமுகமது, மு.சுப்பிரமணியன், ஏஐசிசிடியு மாவட்ட நிர்வாகி இராமச்சந்திரன், எல்எல்எப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சுடர்வள வன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ராஜசேகர், ஹெச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனந்தராஜ் ஆகியோர் உரையாற்றினர்.