districts

img

ரயில்வே பாதையை திறக்க கோரி எம்.பி.யிடம் சிபிஎம் கவுன்சிலர் மனு

திருச்சிராப்பள்ளி,  மே 27 - திருச்சி மாநகராட்சி 35-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் சுரேஷ், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனிடம் கொடுத்த  மனுவில் தெரிவித்துள்ளதாவது: “திருச்சி செந்தண்ணீர் புரம், சங்கிலியாண்டபுரம் சுற்றுவட்டார பகுதியில் பல்லா யிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் செந்தண்ணீர் புரத் திற்கும், பொன்மலை பகுதிக் கும் இடையில் உள்ள ரயில்வே வழித்தட  பாதையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி  வந்தனர். இங்குள்ள மக்கள் பொன்மலை யில் அமைந்துள்ள வாரச் சந்தை, ரயில்வே தொழிற்சாலை, ரயில்வே மருத்துவமனை, பொன்மலை காவல் நிலையம், ரயில்வே ஸ்டேசன், ரயில்வே பள்ளி  சென்று வர இந்த  பாதைதான் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.  சமீப காலமாக இந்தப் பாதை மூடப் பட்டு விட்டது. இதனால் பொதுமக்கள் பல  கிலோமீட்டர் சுற்றி சம்பந்தப்பட்ட இடத்திற்கு  செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே  இந்த பாதையை திறந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் பயன்பெற தாங்கள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரி வித்திருந்தார்.  சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் மனுவை கொடுத்தபோது சிபிஎம் பாலக்கரை பகுதி  செயலாளர் சிவக்குமார், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் லெனின், விசுவநாதன், பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

;