districts

img

சிபிஎம் போராட்டம் வெற்றி தாராசுரம் பகுதியில் வேகத்தடை அமைப்பு

கும்பகோணம், ஜூலை 2-

     தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக் குட்பட்டது 34 ஆவது வார்டு  தாராசுரம் எலுமிச்சங்கா பாளையம்.  

    இப்பகுதிகளில் அதி களவு போக்குவரத்து இருப்பதால், மக்களை பாது காக்க முக்கிய பகுதிகளின் சாலையில் வேகத்தடை அமைக்க கோரி ஜூன் 30  அன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நெடுஞ்சாலை துறை அலுவ லகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.   இதற்கு மாமன்ற உறுப்பினர் செல்வம்  தலைமை வகித்தார்.

    போராட்டத்தை தொ டர்ந்து, அதிகாரிகள் கோரிக் கைகளை ஏற்று சம்பந்தப் பட்ட பகுதிகளில் வேகத்தடை அமைப்பதற்கு உறுதியளித்தனர். இந்நிலை யில் ஜூலை 1 (சனிக்கிழமை)  அன்று முக்கிய பகுதிகளின் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

    மக்களுக்கான போராட் டத்தை நடத்திய மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கும், 34 ஆவது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் நெடுஞ் சாலைத் துறை அதிகாரி களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.