திருச்சிராப்பள்ளி, செப்.22 - திருச்சி பழைய பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்கா மல், சட்டவிரோதமாக அமைத்த சாலைக்கு வாகன வசூல் செய்வதை கைவிட வேண்டும். சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்ற உயர்நீதி மன்ற உத்தரவை அமலாக்க உரிய நிலத்தை விரைந்து கையகப்படுத்த வேண்டும். சர்வீஸ் சாலை அமைக்கும் வரை அனைத்து இணைப்பு சாலைகளிலும் சிக்னல் அமைத்து போக்குவரத்து காவலர்கள் மூலம் போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும். கடந்த 17 ஆண்டுகளில் இந்த சாலை களில் நடந்த விபத்துகளில் சுமார் 1500 பேர் இறந்துள்ளனர். பலர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். எனவே இப்பகுதியில் விரைவில் சர்வீஸ் சாலை அமைத்து மனித உயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் பகுதி குழு சார்பில் சனிக்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. கைலாசநகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடந்த போராட்டத்திற்கு காட்டூர் பகுதி செய லாளர் மணிமாறன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மூத்த தோழர் கே.சி.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், கிளை செய லாளர்கள், சர்வீஸ் சாலை மீட்பு அனைத்துக் கட்சி கூட்டமைப்பினர் பேசினர். முன்னதாக இந்த சாலையில் ஏற்படும் தொடர் உயிரிழப்புகளை சித்தரித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் சார்பில் மூத்த தோழர் கருப்பன் தலைமையில் ‘மரண வாசல்’ என்ற குறு நாடகம் நடைபெற்றது. மூத்த தோழர் பத்மநாபன் நன்றி கூறினார்.