districts

img

சிபிஎம் மூத்த தோழர் எம்.சீனிவாசன் காலமானார்

கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள கிளரியம் - கோட்டம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எம்.சீனிவாசன் (80) வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை காலமானார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் உள்ளிட்டோர் தோழர் சீனிவாசன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் கே.சீனிவாசன், ஒன்றிய குழு-கிளை உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.