அருமனை, ஜன.16- குமரி மாவட்டம் மேல் புறம் வட்டாரம் மருதங் கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் அர சியல் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. மருதங்கோடு ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை தங்கினார். மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாநில குழு உறுப்பினர் ஆர்.லீமா றோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண் ணன், மேல்புறம் வட்டார செயலாளரும் பாகோடு பேரூராட்சி தலைவருமான ஆர்.ஜெயராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பி.சிங்கா ரன், வின்சென்ட், மைக்கேல் தாஸ், சுரேஷ், கிறிஸ்துதாஸ் ஹென்றி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இதில் பலர் பங்கேற்றனர்.