districts

img

சுற்றுச்சாலையை மாற்று வழித்தடத்தில் அமைத்திடுக சிபிஎம், பொதுமக்கள் மனு கொடுக்கும் போராட்டம்

அறந்தாங்கி,  ஜூன் 12 -

    குடியிருப்புகள், விவசாய விளைநிலங்கள், விவசாய ஆழ்துளைக் கிணறு, நீர்நிலைகளை பாதிக்கும் வகையில், ரிங்ரோடு அமைப்பதை கைவிட வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சுற்றுச்சாலையை மாற்று வழித்தடத்தில் அமைத்திட வேண்டுமென வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அண்ணாசிலை அருகிலிருந்து ஊர்வலமாக சென்று, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பவானி மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளரிடம் மனு கொடுத்தனர்.

   இந்த போராட்டத்தில் மேலப்பட்டு, அழியாநிலை, வைரிவயல், ரெத்தினகோட்டை, சிலம்பாவயல், மூக்குடி ஆகிய சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.