districts

img

நிலமற்ற ஏழைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி சிபிஎம் காத்திருப்பு போராட்டம்

பாபநாசம், அக்.5- ராஜகிரி பெரியார் தெருவில் நத்தம் புறம்  போக்கில் முறைகேடாக வழங்கப்பட்ட  பட்டாக்களை ரத்து செய்து, அங்கு வசித்து  வரும் நிலமற்ற ஏழைகளுக்கு வீட்டு மனை  பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாப நாசம் தாலுகா அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். ஜான்சன், ராஜேந்திரன், ஸ்டீபன், சுதாகர், ஸ்ரீ நாத் முன்னிலை வகித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் காதர் உசேன், ஒன்றியச் செய லாளர் முரளிதரன், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் சேக் அலாவுதீன், செல்வகுமார், ஜார்ஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.  போராட்டத்தில், ராஜகிரி பெரியார் தெருவில் நத்தம் புறம் போக்கில் முறை கேடாக வழங்கப் பட்ட பட்டாக்களை ரத்து  செய்து, அங்கு வசித்து வரும் நிலமற்ற ஏழை களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்  டும், பெரியார் தெரு சுடுகாட்டிற்கு மயான கொட்டகை அமைத்துத் தர வேண்டும். பெரியார் தெருவில் வசித்து வரும் ஏழை களுக்கு தொகுப்பு வீடு கட்டித் தர வேண்டும். பாபநாசம் பேரூராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்த வேண்  டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.