கும்பகோணம். ஜூலை 13-
கும்பகோணம் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடை பெற்று வருகிறது.
இந்த மறைமுக ஏலத்துக்கு கும்பகோணம் பகுதி யைச் சேர்ந்த விவசாயிகள் 269 லாட் பருத்தி கொண்டு வந்தனர் எலத்தில் அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 687-க்கும் குறைந்தபட்சம் குவிண்டாளுக்கு ரூ.5 ஆயிரத்து 289-க்கும் விலை போனது
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “பருத்தி சீரான தரம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு விலை நிர்ண யிக்கப்படுகிறது. அடுத்த முறை ஏலத்தில் இன்னும் கூடு தலாக பருத்தி விலை போகும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.