districts

மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி, ஏப்.17 - திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்  குறித்த ஆய்வுக் கூட்டம்  அமைச்சர் கே. என்.நேரு தலைமையில் சனிக்கிழமை மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் நகரத்திட்ட குடிநீர்  பணிகள் நடைபெற்று வரும் பகுதி களான, தென்னூர், அண்ணாநகர், புத்தூர்,  சிந்தாமணி, தில்லைநகர், மரக்கடை, மலைக்கோட்டை, உறையூர் ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை புனரமைக்கப்பட்டு, 43,114 வீட்டு இணைப்புகள் புதுப்பிக்கப்பட உள்ளன. 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மேம்படுத்தப்பட உள்ளதை விரைந்து முடித்து, பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்பட வேண்டு மெனவும், போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறின்றி பணிகளை  மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.  சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பாதாள  சாக்கடை கழிவு நீர் குழாய் மறுசீர மைக்கும் திட்டப் பணிகள்,  வரையறுக் கப்பட்ட பகுதிகளில் மொத்தம் 37 வார்டு களில் பாதாள சாக்கடை திட்டம் 3  தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு பணிகள்  நடைபெற்று வருகின்றன. மேற்படி 37  வார்டுகளில், 13 வார்டுகளில் முழுவது மாகவும் மற்றும் 24 வார்டுகளில் பகுதி யாகவும் திட்டப்பணி நடைபெற்று வரு கின்றன. ஆய்வு கூட்டத்தில் மேயர் அன்ப ழகன், ஆணையர் முஜிபுர் ரகுமான்,  துணை மேயர் திவ்யா, நகரப் பொறியா ளர் அமுதவல்லி, செயற்பொறியா ளர்கள் சிவபாதம், குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;