districts

தோழர் முனிய்யன் படத்திறப்பு நிகழ்வு

திருவாரூர், ஜூன் 6-

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் மேலராமன்  சேத்தியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் முனிய்யன் படத்திறப்பு விழா அவரது இல்லத்தில் நடைபெற்றது.

     கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி தோழர். முனிய்யன் படத்தை திறந்து வைத்தார். முனிய்யன் மகன் முருகேசன், குடவாசல் தெற்குப் பகுதி  ஒன்றியக்குழு செயலாளர் ம.கோபிநாத், மாவட்டகுழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா, கிளைச் செயலாளர் முருகையன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.