திருத்துறைப்பூண்டி ஜன.29 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவா ரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றி யம் ஆதிரங்கம் கிளையின் முன்னாள் உறுப்பி னரும் பல்வேறு பொறுப்புகள் வகித்த மாவன்னா என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் மகா லிங்கம் சனிக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருத்து றைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, கே. என்.முருகானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர் கே.பி. ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.