திருவாரூர், மே 17-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (திருவாரூர்) வலங்கைமான் ஒன்றியம் கொக்கலாடி கிராமக் கிளையின் செயலாளர் ஜி.தியாகராஜன்,ஜி.ராமதாஸ் ஆகியோரின் தந்தை பி.கணேசன் சமீபத்தில் காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்வு புதனன்று நடைபெற்றது. வலங்கை மான் ஒன்றியச் செயலாளர் என்.இராதா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச்யலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மறைந்த பி.கணேசன் படத்தை திறந்து வைத்து புக ழஞ்சலி செலுத்தினார். மாவட்டகுழு உறுப்பினர் கே.சுப்ர மணியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி.சண்முகம், எஸ்.இளங்கோவன், பி.விஜய், ஜெ.ஜெயராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.