மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் சென்னை செல்லும் பேருந்துகள் நிற்கிற பகுதியில் உள்ள குடிநீர் டேங்குக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. பழுதை சரிசெய்ய வேண்டிய நகராட்சி நிர்வாகம் இதுவரை சரிசெய்யவில்லையென்றும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.