districts

img

பதக்கங்களை அள்ளி குவிக்கும் நரிக்குறவர் சமூக மாணவர்கள் மாவட்ட அளவிலான குத்துச்சண்டையில் சாதனை

மயிலாடுதுறை, டிச.15-  மயிலாடுதுறையில் பள்ளி மாணவர் களுக்கிடையேயான மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அதிகளவில் வெற்றி பெற்று நரிக்குறவர் சமூக மாண வர்கள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர். மயிலாடுதுறையில் மாவட்ட அள விலான குத்துச்சண்டை போட்டி நடை பெற்றது. போட்டியில்  பல்லவராயன் பேட்டையில் இயங்கி வரும் நரிக்குறவர் உண்டு உறைவிட பள்ளியில் தங்கிப் பயி லும் 11 மாணவர்களும் கலந்து கொண்டு  தங்களின் அபார திறமையை வெளிப் படுத்தியது  அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. ஒவ்வொரு மாணவர்களின் விளை யாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் விளையாட்டுப் போட்டி கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், மயிலாடுதுறை சாய் உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியினை மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் காந்திமதி தொடங்கி வைத்தார்.  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள  அரசு பள்ளி, அரசு உதவி பெறும்பள்ளி மற்றும் தனியார் பள்ளி என 22 பள்ளி களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 3 பிரிவுகளில் வயது அடிப்படையில் தனி தனியாக  நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மாணவர்கள் ஒருவருக்கொரு வர் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.  போட்டியில் மயிலாடுதுறை பல்லவரா யன்பேட்டை நரிக்குறவர் உண்டு, உறை விட பள்ளியில் தங்கிப் பயிலும் 11 மாண வர்களும் வெற்றி பெற்று பதக்கங்களை  வென்றனர். 11 பேரில் 5 பேர் தங்கப்பதக் கம் வென்று மாநில போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர். .  போட்டியில் வெற்றிபெற்று  முதலிடம் பிடித்த  மாணவர்கள்  ஜனவரி மாதத்தில் சிவ கங்கை மாவட்டத்தில் நடைபெறும் மாநில  அளவிலான  போட்டியில் பங்கேற்கவுள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.  சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் சாதிப்பார்கள் என்பதற்கு நல் உதாரண மாக உள்ள மயிலாடுதுறை பல்லவரா யன்பேட்டை நரிக்குறவர் சமூக மாண வர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.

;