districts

‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ பொதுமக்கள் வரவேற்பு: முதல்வருக்கு நன்றி

திருச்சிராப்பள்ளி, அக்.12 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங் களை சிறப்பாக செயல்படுத்தி வரு கிறார். நகரம் மற்றும் கிராமப்புறப் பகுதி களில் பள்ளிக்குச் செல்லக் கூடிய குழந் தைகள் காலையிலேயே புறப்பட்டு விடு வதாலும், குடும்ப சூழல் காரணமாக பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதில்லை.  இதனையறிந்த தமிழக முதல்வர் அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம்  வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  காலை நேரத்தில் உணவு வழங்கும்  வரலாற்றுச் சிறப்புமிக்க “முதலமைச்ச ரின் காலை உணவுத் திட்டத்தினை” தொடங்கி வைத்தார்.  இத்திட்டம் குறித்து திருச்சி மாவட்ட  ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்ததா வது: தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ,  மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வர்,  புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்.  மேலும், ஒரு சிறப்புத் திட்ட மாக, இந்தியாவிற்கே முன்மாதிரியாக, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலையில் ஊட்டச் சத்து மிகுந்த உணவினை உண்டு கல்வி  பயில்கிற வகையில் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” செயல்படுத் தப்பட்டுள்ளதை மக்கள் பெரிதும் பாராட்டி வரவேற்கின்றனர்.  திருச்சி மாவட்டத்தில், முதற்கட்ட மாக திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 40 பள்ளிகளிலும் துறையூர் ஒன்றியத்தில் 41 பள்ளிகளிலும் என மொத்தம் 81 பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 திருச்சி மாநகராட்சிப் பகுதியில் 40  பள்ளிகளில் 2928 மாணவ, மாணவி களுக்கும், துறையூர் ஒன்றியத்தில் உள்ள 41 பள்ளிகளில் 2705 மாணவ, மாணவிகளுக்கும் என 1 முதல் 5 ஆம்  வகுப்பு வரை பயிலும் 5633 மாணவ,  மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப் பட்டு பயன்பெற்று வருகின்றனர்.  திருச்சி மாநகராட்சிப் பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ,  மாணவிகளுக்கு அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளி வளாகத் தில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைக்கப்பட்டு வெளி ஆதாரமுறை யில் காலை உணவு தயாரிக்கப்பட்டு, 2928 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் படுகிறது. துறையூர் ஊராட்சி ஒன்றி யத்தில் உள்ள 41 தொடக்கப் பள்ளி களில், அங்குள்ள சத்துணவு மையங் களில் பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினரால் காலை உணவு தயாரிக்கப்பட்டு 2705 மாணவ, மாணவி களுக்கு வழங்கப்படுகிறது.  திருச்சி மாவட்டத்தில் இத்திட்டம்  முழுமையாகச் செயல்படுத்தப்படும் போது கூடுதலாக 1488 பள்ளிகளில் பயி லும் 1,96,733 மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள்.  இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பச்சமலைப் பகுதியில் படிக்கும் மாணவ, மாணவியின் பெற்றோர் செல்வி, பழனிமுருகன் கூறுகையில், “பழங்குடியின மக்களாகிய நாங்கள் துறையூர் ஊராட்சி ஒன்றியம், பச்ச மலையில் உள்ள தோனூர் கிராமத்தில்  கூலி வேலை செய்து வாழ்ந்து வரு கிறோம்.  

எங்களுக்கு ஒரு மகன், ஒரு  மகள் உள்ளனர். எங்களது மகன் தர்னிஷ் குமார் ஐந்தாம் வகுப்பும், மகள் ஜனனி  முதல் வகுப்பும் கோவிந்தாபுரம் ஊராட்சி  ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து  வருகின்றனர்.  இந்த காலை உணவுத் திட்டமானது எங்களுடைய குழந்தைகளுக்கு மிக வும் உதவிக்கரமாக உள்ளது. குழந் தைகள் காலையில் பள்ளிக்குச் செல்லும் போது அவசர அவசரமாக ஏதேனும் இருப்பதை சாப்பிடக் கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைப் போம். சில நேரங்களில் காலை உணவு  சாப்பிடாமலே குழந்தைகள் பள்ளிக் குச் சென்று விடுவார்கள். ஆனால்  இந்த திட்டத்தின் மூலம் குழந்தை களுக்கு ஊட்டச்சத்து மிக்க உண வினை கொடுப்பது எங்களுக்கு மிகவும்  மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பாடங் களையும் நல்ல முறையில் கவனித்து படிக்கிறார்கள். இந்த சிறப்பான காலை  உணவுத் திட்டத்தை வழங்கிய முதல மைச்சருக்கு எங்களது குடும்பத்தின் சார்பாகவும், பச்சமலை வாழ் பழங்குடி யின மக்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.

;