புதுச்சேரி, ஜூலை 2- புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி ஆருத்ரா நகரில் உள்ள குருவாலயம் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்றது. 14 வயது கீழ் உள்ளவர்களுக்கான போட்டியில் வர்ஷினியும், ஆண்களுக்கான போட்டியில் வசீகரனும் பட்டம் வென்றனர். 17 வயதுக்கு உட்பட்டவருக்கான விளையாட்டு போட்டியில் சிந்துஜா, ஆண்கள் பிரிவில் முகமது ஜாஸிர், ஆடவர்களுக்கான போட்டியில் அன்ருச் நரசிம்மா, பெண்களுக்கான பிரிவில் ரௌபாரி ஆகியோர் சாம்பியன்ஷிப் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. காதுகேளாதோர் சங்கத்தின் புதுச்சேரி செயலாளர் பாசித் விழாவிற்கு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ரோட்டரி கிளப் செயலாளர் பிரகாஷ் மற்றும் முத்துராமன், சங்க ஆலோசகரும், வழக்கறிஞர் சரவணன், டிஃப் எனேபிள் பவுண்டேஷன் மேலாளர் ஞானவேல் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். பேட்மிட்டன் பயிற்சியாளர்கள் கணபதி,விவேகானந்தன், செய்கை மொழி பெயர்ப்பாளர் அபிலா உட்பட திரளானோர் விழாவில் கலந்து கொண்டனர்.