districts

குடவாசலில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் உணவுத்துறை அமைச்சர் சிறப்புரை

குடவாசல், பிப்.4 -  திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அலு வலகத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத் தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் அ.சக்கரபாணி சிறப்புரையாற்றினார். குடவாசல் பேரூராட்சி யில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பா ளர்கள் திமுக-10, காங்கி ரஸ்-2, சிபிஎம்-2, விசிக-1 என  15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் திமுக சட்ட மன்ற உறுப்பினரும், தமிழக  உணவுத்துறை அமைச்சரு மான அ.சக்கரபாணி வேட்பா ளர்களுக்கு கதர் ஆடை அணிவித்து சிறப்புரை யாற்றினார். முன்னதாக மாவட்ட ஊராட்சி மன்றத் தின் தலைவர் தலையாமங்க லம் பாலு வேட்பாளர்களை வாழ்த்தி பேசினார். திமுக ஒன்றிய செயலா ளர் பா.பிரபாகரன், நகர செய லாளர் ஆர்.முருகேசன், மாவட்ட வர்த்தக துணை அமைப்பாளர் ஆதித்யா பாலு மற்றும் சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர். லெட்சுமி, மாவட்ட குழு உறுப் பினர் எப்.கெரக்கோரியா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.