districts

img

அக்னி பாதை திட்டத்தை ரத்து செய்க! திருக்கடையூரில் மாணவர், வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 20 -   அக்னி பாதை திட்டத்தை ரத்து  செய்ய வேண்டும். இந்திய ராணுவத் துறையை சீரழிக்கும் இத்திட்டத்திற்கு எதிராக போராடிய வாலிபர் சங்க, மாண வர் சங்க தலைவர்கள் மீது தாக்குதல்  நடத்திய காவல்துறையை கண்டித்து  மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடை யூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் ஒன்றிய பொரு ளாளர் பவுல் சத்தியராஜ் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் ஏ.வி.சிங்காரவேலன், ஒன்றிய  செயலாளர் ஐயப்பன், மாணவர் சங்க  மாவட்ட செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, அனிஷ்ரஹ்மான், சாமித்துரை, மணி பாரதி உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். முன்னதாக பதாகைகளை ஏந்தியவாறு பேருந்து நிறுத்தம் வரை முழக்கங்களை எழுப்பி பேரணியாக சென்று பின்பு சன்னதி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடவாசல்
அக்னிபாத் திட்ட நகலை எரித்து திருவாரூர் மாவட்டம் குடவாசல் வி.பி.  சிந்தன் பேருந்து நிலையம் அருகே வாலிபர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட் டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றியத் தலை வர் பி.குமரேசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கே.பகத்சிங் முன்னிலை வகித்தார். மாவட்டச் செய லாளர் கே.பி.ஜோதிபாசு, தலைவர் எஸ். எம்.சலாவுதின் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

;