districts

பாதாளச் சாக்கடை பள்ளத்தால் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற தனியார் வாகனம் கவிழ்ந்து விபத்து 30-க்கும் மேற்பட்டோர் காயம்

மயிலாடுதுறை, மார்ச் 2 - பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற தனியார் வாகனம் பழுதடைந்த பாதா ளச் சாக்கடை மூடியில் சிக்கி கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இதில் 30-க்கும்  மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ள னர். மயிலாடுதுறை நகரில் உள்ள 5-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு புறப்பட்ட தனியார் வேன் ஒன்று மயிலாடுதுறை வடக்கு சாலிய தெருவில் சென்று கொண்டிருந்த போது,  சாலையில் உள்ள பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டி மீது ஏறி இறங்கியது.  இதில், தொட்டியில் சரியாக பொருத் தப்படாமல் இருந்த மூடி வேனின் சக்கரத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதால், வேன்  அடிபாகத்தில் உள்ள ஆக்சில் உடைந்தது.  அதிவேகமாக சென்ற வேன் கட்டுப்பாட்டை  இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத் தில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. மயிலாடுதுறையில் இருந்து காளி கிராமம்  வரை உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த  24 மாணவர்கள் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் வேனின் கண்ணாடியை உடைத்து மாணவர்களை மீட்டு, 108 ஆம்பு லன்ஸ் மூலம் கொண்டு சென்று மயிலாடு துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று  மாணவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

 விபத்து ஏற்படுத்திய வேனை ஓட்டிய கடு வங்குடியைச் சேர்ந்த மனோகர் என்பவரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்த னர். இந்த விபத்து குறித்து வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப் பட்டு அந்த தனியார் வேன் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் உரிமம் இல்லாமல் இயங்கும் தனியார் பள்ளி வேன்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.  இச்சம்பவம் தொடர்பாக இந்திய மாண வர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. விபத்துகள் ஏற்பட்ட பிறகுதான் கண்துடைப்புக்காக அரசு அதிகாரிகள் செயல்படுவதாகவும், பள்ளி மாணவர்களை அழைத்து வந்து, செல்லும் தனியார் வாகனங்கள் பல ஆண்டுகளாக இயங்குவது போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு தெரியாமலா இருக்கும்?. உடனடியாக விபத்து தொடர்பாக உரிய நடவ டிக்கையை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி யுள்ளனர்.

;